உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களின் பட்டியலை 7 நாட்களுக்குள் அளிக்க வேண்டும் மாநில தேர்தல் ஆணையம் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதாகவும், தேர்தலுக்கு 6 புள்ளி 5 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் தேர்தல் பணியாளர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க உள்ளாட்சி நிர்வாகத்திற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர்களின் பட்டியலை 5 நாட்களுக்குள் இறுதி செய்து இணையத்தில் பதிவேற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்ய அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post