மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக தமிழக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ட்விட்டரில் வாழ்த்து பதிவிட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இந்த நியமனம், இல.கணேசனின் பணிக்கு, செயலுக்கு, திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில மக்கள் பெருமைப்படும் அளவிற்கு, இல.கணேசனின் பணி விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மணிப்பூர் மாநிலத்தின் மாண்புமிகு ஆளுநர் இல.கணேசன் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post