தேனியில் வறுமையில் தவிக்கும் சிறுமி அனிதாவின் குடும்பத்திற்கு, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிதியுதவி அளித்துள்ளார்.
தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த 13 வயதான சிறுமி அனிதா, நடக்க முடியாத தந்தை மற்றும் மனநலம் பாதிக்கபட்ட தாயாரை பராமரித்து வருகிறார். கல்வி வசதி பெறுவதில் அவதிப்பட்டு வரும் அவரது நிலைமை குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. புதிய வீடு ஒன்றும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. சிறுமியை நேரில் வரவழைத்து, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.
Discussion about this post