சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து ஓ.பன்னீர் செல்வம் பிரசாரம் செய்கிறார். மே 5ஆம் தேதி சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்தும் மே 7ஆம் தேதி அரவக்குறிச்சி வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார். மே 9ஆம் தேதி ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக துணை முதலமமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிக்க உள்ளார்.
Discussion about this post