நாகூர் சீராளம்மன் கோவில் விழாவின் ஊர்வலத்திற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவல்துறை பாதுகாப்புடன் விழா நடைபெற்றது.
நாகை அடுத்த நாகூர், பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் அமைந்துள்ள சீராளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி திருவிழா நடைபெறுவது வழக்கம். விழாவின் துவக்கமாக நாகூர், நாகநாதர் கோவிலில் இருந்து ஏராளமான பெண்கள், பூத்தட்டுகளை தலையில் சுமந்து சென்று, சீராளம்மன் கோவிலை அடைந்து, பூச்சொரிதல் வைபவம் நடைபெறும்.
இந்த ஊர்வலம் குறிப்பிட்ட பகுதி வழியாக செல்வதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் பூச்செரிதல் ஊர்வலமானது காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பில் நடைபெற்றது. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று கோவிலை சென்றடைந்தனர்.
Discussion about this post