சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாசாரத்தை அழிக்க நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
ராமநாதபுரத்தில் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் – திமுக போன்ற எதிர்க்கட்சிகள் நாட்டை பின்னோக்கி எடுத்து சென்றிருக்கிறார்கள் எனவும், மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் எனவும், ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 50 கோடி மக்கள் பலனடைந்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் துறைமுகங்கள் மேம்படுத்தப்படவில்லை என்றும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரம் (1900) மீனவர்களை, பாஜக அரசு பத்திரமாக மீட்டிருக்கிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் ஒரேயொடு குடும்பத்தினருக்கு மட்டுமே நினைவுச்சின்னங்கள் எழுப்பபட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Discussion about this post