விவசாயிகள் நலனில் அக்கறை இருப்பது போல எதிர்கட்சிகள் முதலைக்கண்ணீர் வடிக்கின்றன என்று, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மத்திய இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட பியூஸ் கோயல் தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அருண்ஜெட்லி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளில் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார். 70 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி எனக் கூறிவிட்டு, 54 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்ததாக குற்றம்சாட்டிய அவர் சிறு, குறு விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக விமர்சித்தார்.
Discussion about this post