தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக அப்பாவு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 16வது சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் பதவியேற்பு செவ்வாய்கிழமை நடைபெற்றது.
தொடர்ந்து, சபாநாயகர் பதவியேற்கும் நிகழ்ச்சி, காலையில் நடைபெற்றது.
அவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் சபாநாயகர் அப்பாவுவை இருக்கையில் அமர வைத்தனர்.
அதைத் தொடர்ந்து துணை சபாநாயகராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள், முதலமைச்சர் ஆகியோர் சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.
அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஒரு நாணயத்தின் இரு பக்கங்களான ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளை கட்சிப் பாகுபாடு இன்றி, சட்டப்பேரவை தலைவர் நடுநிலையோடு வழிநடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்கள் பிரச்னைகளை பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கும் போதிய வாய்ப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
Discussion about this post