மகாராஷ்டிர அரசியல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் செவ்வாய் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி அமைத்ததில் ஜனநாயக விதிமுறைகள் மீறப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மக்களவை கூடியதும் அலுவலை ஒத்தி வைத்துவிட்டு மகாராஷ்டிர விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் எனக் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் விவாதிக்க முடியாது என அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நண்பகல் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னரும் உறுப்பினர்களின் அமளியால் முதலில் பிற்பகல் 2 மணி வரையும் பிறகு செவ்வாய் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது.
Discussion about this post