உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிதம்பரத்தை சேர்ந்த மாணவிகள் தர்ஷினி, இலக்கியா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தாததால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர். தனியார் கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர்களுக்கான கட்டணத்தை ஏற்பதாக அரசு வெளியிட்ட அறிவிப்பை, முன் தேதியிட்டு அமல்படுத்த வேண்டுமென்றும் மாணவிகள் வலியுறுத்தினர்.
இந்த வழக்கில் பதிலளித்த தமிழக அரசு, உள் ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்தாததால் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு இடங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Discussion about this post