குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஆண்டுதோறும் தமிழக அரசால் நடத்தப்படும் படகு குழாம் திறக்கப்பட்டதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்தனர். நெல்லை மாவட்டம் குற்றாலத்தை பொருத்தவரை ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய மூன்று மாதங்களும் சீசன் காலமாக கருதப்படும். இந்தநிலையில் குற்றாலத்திலிருந்து ஐந்தருவி செல்லும் வழியில் அமைந்துள்ள வெண்ணைமடை குளம் படகு குழாம், சீசன் காலங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக திறக்கப்படும்.
அதன்படி படகு குழாமை நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா திறந்து வைத்தார். படகில் சவாரி செய்ய, தனி நபருக்கு 95 ரூபாயும், 2 பேர் படகு சவாரிக்கு 120 ரூபாயும், 4 பேர் படகு சவாரிக்கு 150 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்று படகு சவாரி செய்தனர்.
Discussion about this post