உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக, அனைத்து நாட்களிலும் இயங்கும் புகார் மையத்தை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் குறித்த புகார்களை பெறுவதற்கு விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாட்களிலும் இயங்கும் புகார் மையத்தை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க இலவச தொலைபேசி எண்களையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தொலை பேசி எண்களை பயன்படுத்தி பொதுமக்கள் புகார்களை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Discussion about this post