குன்னூர் – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயிலில் பயணிக்க, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் அம்சங்களில் ஒன்றாக விளங்குவது ஊட்டி மலை ரயில். பாரம்பரியமிக்க இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகளைப் பார்த்துக் கொண்டே செல்வது சுவையான அனுபவமாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு நியூயார்க், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
Discussion about this post