உதகை மலைப்பாதையில் பூத்து குலுங்கும் டேலியா மலர்கள், சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.தொட்டபெட்டா சாலை, உட் ஹவுஸ், தாவரவியல் பூங்கா, கல்லட்டி மலைப் பாதை, அவலாஞ்சி சாலை, போன்ற பகுதிகளில், நீலம் மற்றும் வெள்ளை, மஞ்சள் நிற டேலியா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சாலையின் இருபுறங்களிலும் பூத்து குலுங்கும் மலர்கள், சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து, டேலியா மலர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டும் பூக்கும் இந்த மலர்கள் முன் கூட்டியே பூத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post