மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான்:சி.வி.சண்முகம்

எந்த மாநிலமும் செய்யாத வகையில் மாநிலத்தின் 3ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவது தமிழகம் மட்டும் தான் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை வளாகத்தில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் துவக்க விழா மற்றும் கல்வி துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி தொலைக்காட்சி செட் டாப் பாக்ஸ் வழங்கு விழா மற்றும் பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்கள் கலந்துக்கொண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தும், செட் பாக்ஸ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கி பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பெண் கல்வி ஊக்கப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் புரட்சி கரமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்தியாவிலேயே கல்வி துறையில் தமிழகம் வளர்ச்சி கண்டுள்ளதாகவும், தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version