ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டமுன்வடிவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்தார்.
சட்டப்பேரவையில் இதற்கான திருத்த சட்டமுன்வடிவை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிமுகம் செய்ய அனுமதி கோரினார். இதனை சபாநாயகர் பேரவையின் முடிவுக்கு விட்ட போது, அனைத்து உறுப்பினர்களும் ஏற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து திருத்த சட்டமுன்வடிவை துணை முதலமைச்சர் அறிமுகம் செய்தார்.
தடையை மீறி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6 மாத சிறை தண்டனை வழங்கவும், அரங்கம் வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என சட்டத்தில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post