வெளிநாடுகளில் இருந்து வெங்காய வரத்து அதிகரித்துள்ளதால், சென்னையில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.
மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேச மாநிலங்களில் பலத்த மழை பெய்ததால் வெங்காயப் பயிர்கள் அழுகிச் சேதமடைந்தன. இதனால் நாடு முழுவதும் உள்ள சந்தைகளுக்கு வெங்காயம் வரத்து குறைந்ததால், வெங்காயத்தின் விலை கிலோ 180 ரூபாய் வரை உயர்ந்தது. இதனையடுத்து, எகிப்து, துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளதால், வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. வெளிநாட்டு வெங்காயத்தில் காரத்தன்மை இல்லை என்று வெளியான தகவல் பொய்யானது என்றும், இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சுவையாகவும் காரமாகவும் உள்ளதாகவும் அதை வாங்கிப் பயன்படுத்திய பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கையால் சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 70 ரூபாய் என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post