பாலகோட் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் பெரிய அளவில் தீவிரவாத தாக்குதல் நடைபெறவில்லை என, இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி தனோவா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாலகோட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி தனோவா, பாலகோட் தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகள் பெரும் அச்சத்தில் உள்ளதாகவும், அந்த தாக்குதல் இந்திய விமானப்படையின் முன்னுதாரணமான தாக்குதலை குறிக்கிறது எனவும் கூறினார்.
Discussion about this post