அரக்கோணம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளியபோது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு. இவர் உள்ளிட்ட நான்கு பேர் வளர்புரம் அருகே செல்லும் கிருஷ்ணாபுரம் நந்தி ஆற்றில் அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மணல் சரிந்ததில் தங்கவேல் மண்சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேரை கிராம மக்கள் மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். உயிரிழந்த தங்கவேலை பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post