ஒரே தேசம்; ஒரே குடும்ப அட்டை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் :மத்திய அரசு

ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஓராண்டுக்குள் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து மாநில உணவு துறை செயலர்கள் பங்கேற்ற கூட்டம், மத்திய உணவு துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், ஆந்திரா, குஜராத், அரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார். மக்கள், நாட்டின் எந்த பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றாலும் அங்குள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார். அடுத்தாண்டு ஜூன் 30-ம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் இந்த திட்டத்தை கட்டாயமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், தமிழகம், பஞ்சாப், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நியாய விலைக் கடைகளில் பிஓஎஸ் இயந்திரம் மூலம் பணம் செலுத்தும் முறை இருப்பதால், இந்தத் திட்டத்தை எளிதாக நிறைவேற்றலாம் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version