பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் – ஒரே அட்டை திட்டத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ஒரே தேசம் – ஒரே அட்டை திட்டத்தை துவக்கி வைத்தார். இதன்மூலம் பயணிகளுக்கு அவர்களது பயணம் மிகவும் எளிதாக அமையும். இந்த திட்டத்தின் மூலம் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்த முடியும். சுங்கச் சாவடிகளிலும் இந்த அட்டை மூலம் பணம் செலுத்தலாம்.
போக்குவரத்துத் துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள உள்ள இந்த திட்டத்தில் மெட்ரோ ரயில் கட்டணத்தையும், ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணத்தையும் செலுத்த முடியும்.
இதைத்தொடர்ந்து அகமாதாபாத்தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார். பின்னர் மெட்ரோ ரயிலில் அவர் பயணித்தார். பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுடன் பயணித்த அவர்களுடன் அளவளாவி மகிழ்ந்தார். ரயில் நிலையங்களில் நின்றிருந்த பயணிகளை நோக்கியும் பிரதமர் கையசைத்து தனது வாழ்த்தினை தெரிவித்தார்.
Discussion about this post