நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதாக உதித் சூர்யா என்ற மாணவன் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றது. அதில் 5 மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த வழக்கில் கைதான இர்பான் என்ற மாணவனின் தந்தை நீட் தேர்வு ஆள்மாறாட்டத்திற்குத் தரகராகச் செயல்பட்டது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் சென்னை பூவிருந்தவல்லி அருகே உள்ள சவீதா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி பிரியங்கா மற்றும் அவரது தாயாரைக் கைது செய்த சிபிசிஐடியினர், தேனி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.