உலகமெங்கும் சினிமா ரசிகர்கள் தங்களது ஜனநாயக கடமையாக ‘அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ திரைப்படத்தை பார்த்து அதனுடைய வெற்றியை கொண்டாடி வருகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ திரைப்படமும், தற்போது வெளியாகியுள்ள அவெஞ்சர்ஸ்:எண்ட்கேம் திரைப்படமும் படத்திலுள்ள எத்தனையோ சூப்பர் ஹீரோக்களைத் தாண்டி “தானோஸ்” என்கிற ஒரு ஹாலிவுட் பாகுபலியை பற்றி மட்டுமே பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
படத்தில் அனைவரையும் புரட்டியெடுத்த தானோஸ் நிஜ வாழ்க்கையில் எப்படி ? அந்த கிராபிக்ஸ் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்த அந்த நிஜ மனிதர் அதற்கு அப்படியே எதிர்குணம் கொண்டவர் என்றால் நம்ப முடிகிறதா?
அவரது பெயர் ஜோஷ் ஜேம்ஸ் பிரோலின். இவரது அப்பா ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பிரோலின். அப்பா நடிகராக இருந்தாலும் ஆரம்பகாலத்தில் பிரோலினுக்கு ஹாலிவுட் ஒன்றும் கை கொடுக்கவில்லை. 1985ம் ஆண்டு “தீ கூனிஸ்” என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான பிரோலின் ‘பெட் ரோசஸ்’, ‘மிமிக்’, ‘தி மாட் ஸ்வாட்’ உட்பட பலப்படங்களில் நடித்தார். ஆனாலும் சொல்லிக்கொள்ளும்படி படங்களோ, கதாபாத்திரங்களோ அமையவில்லை.
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு பிறகு 2007-ம் ஆண்டு ‘கிரைண்ட் ஹவுஸ்’ என்ற திரைப்படம் பிரோலின் என்ற மனிதனை நடிகனாக வெளிக்கொணர்ந்தது. இதனையடுத்து அதே ஆண்டிலேயே ‘அமெரிக்கன் கேங்ஸ்டர்’ ‘வேல்லி ஆப் இயா’, ‘நோ செஞ்சரி பார் ஓல்ட்மேன்’, 4 திரைப்படங்களில் நடித்து முடித்தார் ஜோஸ் பிராலின். இதன் பலனாக 2008 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் வாழ்க்கையை தழுவிய ‘டபிள்யூ’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் பிராலினுக்கு புது ரசிகர்களை ஹாலிவுட்டில் உண்டாக்கியது.
நல்ல நடிகனாக அறியப்பட்டும் அவரது வயதின் காரணமாக அவருக்கு அடுத்த 3 ஆண்டுகள் படவாய்ப்புகள் இல்லாமல் போனது. மீண்டும் 2012-ம் ஆண்டு எம்.ஐ.பி. படத்தில், நடிகர் வில் ஸ்மித்க்கு குருவாக, ‘ஏஜெண்ட் கே’ கதாபாத்திரத்தில் தோன்றினார். இதன்பிறகே ஹாலிவுட்டில் பிசியான நடிகர் ஆனார் ஜோஸ் பிராலின். எம்.ஐ.பி. படவரிசைகளை தாண்டி ‘கேங்ஸ்டர் ஸ்கூவாட்’ திரைப்படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக பிரமோஷன் பெற்றார்.
இந்த சமயத்தில் தான் 2014ம் ஆண்டில் மார்வெல் நிறுவனம் தானோஸ் கேரக்டரைப் பற்றி கூறி அதில் நடிக்க ஒப்பந்தமும் போட்டது. ஆனால்
ஷூட்டிங்கோ 2017ல் தான். கிட்டத்தட்ட ஒப்பந்ததையே மறந்துவிட்ட பிரோலினை 2016ல் மீண்டும் தொடர்பு கொண்டு ஷூட்டிங் செல்ல தயாராகுமாறு நியாபகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தகவல் அவருக்கு பல தலைவலிகளை உண்டாக்கியது என்றே சொல்லலாம். அவர் நடித்துக்கொண்டிருந்த ஒரு ஆஸ்திரேலிய குறும்படத்தை பாதியில் நிறுத்திவிட்டு அதற்கான நஷ்டஈட்டையும் வழங்கியிருக்கிறார்.
படத்தில் தானோஸ் குடும்பம்,பாசம், செண்டிமெண்ட் என்ற வட்டத்துக்குள் அடங்கி விட மாட்டார். ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் காதல் மன்னனாகவே வாழ்ந்துள்ளார். அவர் 3 முறை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
அதன் பிறகே தானோஸ் தயாரானார். அந்த கோபத்தை படத்தில் சூப்பர் ஹீரோக்களிடம் காட்டியிருப்பார் போல. அப்படி தனக்கென ஒரு ரசிகர் படையே உருவாக்கி கொண்டார். படத்தில் அவரது கதை முடிந்தாலும் மனிதர் இந்த வயதிலும் அடுத்தடுத்த ஆக்ஷன் படங்களில் அவரை நிஜ தானாஸாகவே பார்க்கலாம்.
Discussion about this post