பெட்ரோல் பங்க்கில் காணாமல் போன ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே செந்தில் குமார் என்பவர் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். அலுவலகத்தில் வைத்திருந்த விற்பனை பணம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பணம் காணாமல் போய்விட்டது என்று செந்தில் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து, பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போது, அவர்கள் பணத்தை எடுத்து மறைத்து வைத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஒன்றரை லட்சம் ரூபாயும் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டது. துரித நடவடிக்கை எடுத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாரட்டினர்.
Discussion about this post