கொரோனா பரிசோதனைக்காக தென் கொரிய நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.
தமிழகத்தில் நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு கூடுதலாக 10 லட்சம் பிசிஆர் கருவிகளை, உலகின் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தென் கொரிய நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இதுவரை 5 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்துள்ள நிலையில், இனி வரும் வாரங்களில், 5 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வரவுள்ளதாக, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
Discussion about this post