தமிழகம் முழுவதும் தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் நலன் கருதி அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உடனடியாக பணிக்கு திரும்பினால் அவர்கள் மீது எவ்வித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தது. அதன்படி ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை வரை கெடு விதிக்கப்பட்டது. அதே நேரம் மாற்று ஏற்பாடுகளையும் அரசு செய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்காக மாவட்ட கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிசெய்யப்பட்டு, காலியாக உள்ள இடங்களுக்கு பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
Discussion about this post