பட்டாசுத் தொழிலை பாதுகாக்கக் கோரியும், சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரியும் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புற சூழல் மாசு அடைவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டாசு வெடிக்கவும், பட்டாசு உற்பத்தி செய்யவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
பேரியம் பயன்படுத்த தடை உள்ளதால் 60 சதவீத பட்டாசு தயாரிக்க முடியாமல் போனது. இதனால் பட்டாசு தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்துவருவதாக கூறுகின்றனர். எனவே பட்டாசு தொழிலை பாதுகாக்க, சுற்றுசூழல் விதியில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க கோரி சிவகாசி, திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட 13 இடங்களில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது.
Discussion about this post