சென்னை போரூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் 70-வது கிளையினை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ 297 பயனாளிகளுக்கு 2கோடியே 35 லட்சம் ரூபாய் தொழில் கடன் வழங்கினார். அப்போது, ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தில் தமிழகம் இணைவதில் எந்த தவறும் இல்லை என்றும், இதனால் தமிழக மக்களுக்கு பொருட்கள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் மத்திய அரசின் பாராட்டு சான்றிதழையும், முப்பது கோடி ஊக்கத் தொகையையும் தமிழகம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post