“ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் முறைக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும், அடுத்த ஆண்டில் 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் என மொத்தம் 16 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் 2 ஆண்டுகளில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் பணியை குறைக்கும் வகையிலும், பாதுகாப்பு பணியை எளிமையாக்கும் வகையிலும் 16 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலையும் 2024வது மக்களவை தேர்தலோடு நடத்த உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனு நீதிமன்ற வரம்பிற்குள் வராது எனவும், மனுதாரரின் கோரிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வரக்கூடியது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்!
-
By Web team
Related Content
பூர்த்தி செய்யப்பட்ட ஒப்புதல் படிவங்கள் இன்று தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைப்பு!
By
Web team
February 6, 2023
தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனை!
By
Web team
January 31, 2023
உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
By
Web Team
December 30, 2019
உள்ளாட்சித் தேர்தல்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் வழங்கியுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
By
Web Team
September 15, 2019