ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி நாளை அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவ தலங்களில் ஒன்றாக கருதப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு விழா நாளை அதிகாலை நடைபெறுகிறது. அதிகாலை 4.15 மணிக்கு நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுகிறார். அதிகாலை 5.30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்படுகிறது. நம்பெருமாளுடன் சொர்க்கவாசலை கடந்து சென்றால் மோட்சத்தை அடையலாம் என்பது ஐதீகம். எனவே, தமிழகத்தில் இருந்து மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கத்தில் திரண்டு உள்ளனர். வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, ரெங்கநாதர் கோயில் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post