புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் வைகாசி பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். திருநள்ளாறில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்தக் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் தினந்தோறும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வீதியுலாவும் நடைபெற்றது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் விக்ராந்த்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ‘நள்ளாறா, தியாகேசா முழக்கத்துடன் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Discussion about this post