அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பட்டிமன்றங்கள் நடைபெறும் என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அதிமுக அரசின் சாதனை விளக்கப் பட்டிமன்றங்கள், வரும் 27 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. மொத்தம் 20 இடங்களில் பல்வேறு தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடைபெற இருக்கின்றன. முதல் பட்டிமன்றம், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நடக்கிறது. தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களிலும் பட்டிமன்றங்கள் நடைபெற உள்ளன.
Discussion about this post