நாமக்கல்லில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு முழுவீச்சில் செய்து வருகிறது.
நாமக்கல்லில் 338 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைக்கபடுவதற்கான அனுமதியை மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, முதற்கட்டமாக 100 கோடி ரூபாயையும் அரசு ஒதுக்கியது. 38 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தற்போது மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அளவீடுகள் முடிவடைந்து கட்டுமானப் பணிகளுக்கு தயாராக உள்ளது.
நாமக்கல் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 5ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார். 2021-2022 கல்வி ஆண்டு முதல் நாமக்கல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பாட்டிற்கு வரும் என்று நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த, நாமக்கல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.
Discussion about this post