எதிர்காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து இனி ஆலோசிக்க மாட்டோம் என்று சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நட்புறவு மிகவும் பாதித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற உள்ள 25மீ துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியா விசா வழங்க மறுத்துள்ளது.
இதனை கண்டித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்கம், எந்தவித அரசியல் பாகுபாடும் இன்றி அனைத்து நாட்டு வீரர்களும் போட்டியில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் தெரிவித்தது. இதற்கு இந்தியா இதுவரை எந்த பதிலும் சொல்லாததால் கண்டனம் தெரிவித்த சர்வதேச ஒலிம்பிக் சங்கம், டெல்லியில் நடைபெற இருந்த 25மீ துப்பாக்கி சுடும் போட்டியை ரத்தும் செய்துள்ளது.
மேலும் எதிர்காலத்தில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது குறித்து இனி ஆலோசிக்க மாட்டோம் என்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
Discussion about this post