ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட மூதாட்டி மீட்பு

சிறு மதுரை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அங்கம்மாள் சிறுவனூர் கிராமத்தில் உள்ள ஏரியை கடக்க முயன்று15 அடி ஆழமுள்ள ஏரி தண்ணீரில் சிக்கிக்கொண்டுள்ளார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தண்ணீரில் சிக்கிகொண்ட மூதாட்டியை நீண்ட நேரப்போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் பத்திரமாக மீட்டனர். உறவினர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மூதாட்டி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும், வழி தெரியாமல் ஏரியை கடக்க முயன்று சிக்கிக் கொண்டதாகவும் கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய் நல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version