கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 கட்டங்களாக பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவல் ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி கல்லூரி வாகனங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். மொத்தம் 732 பள்ளி, கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 17 வாகனங்கள் முறையாக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யாததால் உடனடியாக தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. 4 கட்டங்களாக நடைபெறும் இந்த ஆய்வில் சோதனைக்கு வராத வாகனங்களின் தகுதிச்சான்று 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.
Discussion about this post