பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவை எட்ட உள்ளதால், விரைவில் உபரி நீர் திறக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2.47 இலட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அணை நிரம்பியதால், உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அணையின் நீர்மட்டம் 105 அடியை எட்டும் நிலையில் உள்ளது. எனவே, உபரி நீர் மீண்டும் திறக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 965 கன அடியாக உள்ள நிலையில், பவானி ஆற்றில் 2 ஆயிரத்து 300 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 600 கன அடியும் என வெளியேற்றப்பட்டு வருகிறது.
Discussion about this post