வெங்காய வரத்து குறைந்ததையடுத்து சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் சிறிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளதையடுத்து, விலை உயர்வை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், நவம்பர் மாத தொடக்கத்தில் 3 மடங்கு விலை உயர்ந்து 80 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தற்போது, கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 160 ரூபாயில் இருந்து 180 ரூபாய் வரையிலும், சிறிய வெங்காயம் ஒரு கிலோ 180 ரூபாயில் இருந்து 200 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
Discussion about this post