காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது செய்த பொருளாதாரத் தவறுகளை இப்போதைய ஆட்சியில் தொடரமாட்டோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
டெல்லியில் இந்திய தொழில், வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் தேவையில்லாமல் அதிக செலவுகளைச் செய்து பொருளாதார வளர்ச்சியை உயட்த்தி காட்டியதாகவும், பின்னர் அதை பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்ததாக கூறினா. அப்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்த இருந்ததாக கூறிய அவர், 2008-ஆம் ஆண்டு சர்வதேச அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, அப்போதைய அரசு இந்த தவறான பொருளாதார முறையைக் கையாண்டதாகவும், அவர்களின் தவறுகளை நாங்கள் தொடர மாட்டோம் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை உண்மையாகவே உயர்த்திக் காட்ட வேண்டுமென்று மக்கள் தங்களிடம் எதிர் பார்ப்பதாகவும், துறைரீதியாக தேவைப்படும் அளவிலும், நிதி ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டும் அரசின் வளர்ச்சித் திட்ட செலவுகள் அமையும் என்று அவர் கூறினார்.
Discussion about this post