ஒடிசாவின் ஆளும்கட்சியின் சுகாதாரத்துறை அமைச்சரான நபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ஜார்சுகுடா எனும் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு நபா தாஸ் கலந்துகொள்ள சென்றார். அப்போது பொதுமக்களுடன் மக்களாக கலந்து கொண்டிருந்த போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர்[ASI] கோபால் தாஸ் நபா தாஸை சரமாரியாக சுட்டுத் தள்ளினார். கிட்டத்தட்ட ஐந்து முறை சுட்டதாக சொல்லப்படுகிறது, இதனால் நெஞ்சில் குண்டு பாய்துள்ளது. உயிருக்கு மோசமான நிலையில் அமைச்சர் நபா தாஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமைச்சரை சுட்ட கோபால் தாஸை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் சுடப்பட்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Moment When Odisha Health Minister #NabaDas Shot. pic.twitter.com/jgBv3NrNPf
— Sandeep Panwar (@tweet_sandeep) January 29, 2023
Discussion about this post