தற்போது நடந்து முடிந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது சிறந்த வீரர்களின் பட்டியல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை முதல் பத்து இடங்களில் சுப்மன்கில், விராட்கோலி, ரோகித் சர்மா ஆகிய மூவர் இடம்பிடித்துள்ளனர். இதில் சுப்மன் கில் 6வது இடம், விராட் கோலி 3வது இடம், ரோகித் சர்மா 9 இடம் பிடித்துள்ளனர்.
பந்துவீச்சினைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து ஒரே ஒரு பந்து வீச்சாளர் மட்டும்தான் முதல் பத்து இடத்திற்குள் உள்ளார். அதுவும் முதல் இடத்தில் உள்ளார். அவர் முகமது சிராஜ் ஆகும். முகமது சிராஜின் ஆரம்பக் கட்டத்தினை எடுத்துப் பார்த்தால், அவர் பல விமர்சனங்களுக்கு ஆளாகி மோசமான பந்து வீச்சாளரகாவே இருந்து வந்தார். பின்னர் தன் திறமையை படிப்படியாக வளர்த்துக்கொண்டு டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கினார். பின்னர் ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். பிறகு இந்திய ஒருநாள் அணியில் வாய்ப்புக் கிடைத்தது. கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து சிறப்பாக பந்துவீச்சினை மேற்கொள்ளும் சிராஜ் பவர்பிளேகளில் விக்கெட் எடுக்காமல் இருந்ததில்லை. மேலும் டெஸ்ட் போட்டியின் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே ஒரு இந்திய வீரர் ரிஷாப் பண்ட் ஆவார்.
Discussion about this post