வருகின்ற அக்டோபர் 8ம் தேதி, பாரிஸில் முதல், ‘ரபேல்’ ரக போர் விமானத்தை இந்தியாவிடம், பிரான்ஸ் நாடு ஒப்படைக்க உள்ளது.
இந்திய விமானப்படைக்கு, 36 ரபேல் ரக போர் விமானங்கள் வாங்க, பிரான்ஸ் நாட்டுடன், கடந்த 2016 ஆம் ஆண்டு, செப்டம்பரில் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பிரான்ஸ் நாட்டின், ‘டசால்ட் ஏவியேஷன்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த போர் விமானத்தின், முதல் விமானம், வரும், 8ம் தேதி ஒப்படைக்கப்பட உள்ளது. பாரிஸில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின்போது, ரபேல் போர் விமானத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் செல்ல உள்ளார். பாரிஸில் உள்ள விமானப் படை தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரபேல் போர் விமானம் ஒப்படைக்கப்பட உள்ளது. அப்போது, ரபேல் போர் விமானத்தில், ராஜ்நாத் பயணம் மேற்கொள்ள உள்ளார். மேலும் இந்தப் பயணத்தின்போது, பிரான்ஸ் அரசுடன், பாதுகாப்புத் துறை உறவுகள் குறித்து, ராஜ்நாத் சிங் பேச்சு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post