திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த காலத்திலும் முதலமைச்சராக முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில், அத்தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து எதிர்கட்சிகளால் குறை சொல்ல முடியவில்லை என்றும், அரசின் திட்டங்களைப் பார்த்து திமுக பொறாமைப்படுவதாகவும் கூறினார். எந்த காலத்திலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என்றும் அப்போது அவர் விமர்சித்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து மாப்பிள்ளை ஊரணி பகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 2023 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் வாழும் குடிசை பகுதி மக்களுக்கு, தரமான உறுதியான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றார்.