கூடங்குளம் அணு உலை கழிவுகளை பாதுகாத்து வைப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை என அணு விஞ்ஞானி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
S.E.T.S என்னும் மின்னனு தொழில்நுட்ப பரிவர்தனை மற்றும் பாதுகாப்பு அமைப்பின் 25வது ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அணு விஞ்ஞானி சிதம்பரம், S.E.T.S நிர்வாகி விஜயாராகவன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மின்னனு தொழில் நுட்பம் பாதுகாப்பு தொடர்பான நவீன செயல்பாடுகள் மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தால் சைபர் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அனு விஞ்ஞானி சிதம்பரம், கூடங்குளம் அணு உலை கழிவுகளை பாதுகாத்து வைப்பதால் எந்தவித பாதிப்பும் இல்லை எனவும், 10 அணு உலைகளை உருவாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரபுசாரா எரிசக்தி , அணு உலை மின்சாரம், கார்பன் சேமிப்பு உள்ளிட்ட பல தொழில்நுட்பத்தை நாம் கையாள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post