காஞ்சிபுரத்தில் குழந்தைகள்,கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போஷான் அபியான் திட்டமானது, தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 5 மாவட்டங்களிலும், 2ஆவது கட்டமாக 6 மாவட்டங்களிலும், 3ஆவது கட்டமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 21 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச் சத்து நிலைகளை மேம்படுத்துதல், குழந்தைகளின் வளர்ச்சிகளில் குள்ளத்தன்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, மற்றும் எடை குறைவாகப் பிறத்தல் ஆகிய குறைபாடுகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் வரை அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பொன்னையா, 2 ஆயிரத்து 206 அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு கைப்பேசி வீதம் 2 ஆயிரத்து 206 கைப்பேசிகளை வழங்கினார்.
Discussion about this post