இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இரண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இலங்கையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் அதிபர் மைத்திரிபால சிறிசேன தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அந்த அமைப்புகளின் சொத்துக்களும் முடக்கப்படுவதாக அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேபோல், இலங்கையில் செயல்படும் பிற தீவிரவாத அமைப்புகளுக்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post