புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் கே.நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரி மக்களவைத் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் கே.நாராயணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

17-வது மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரேகட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடைபெற்றுள்ளது.

தமிழகத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளநிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். டாக்டர் கே.நாராயணசாமி புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் நாராயணசாமி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

Exit mobile version