தூத்துக்குடி – சென்னை இடையிலான முத்துநகர் விரைவு ரயில் பெட்டிகள் புதுப்பொலிவுப் பெற்றுள்ளன.
முத்துநகர் விரைவு ரயிலில் முதற்கட்டமாக, 23 பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வெளிப்புறம் வெளிர் மஞ்சள் நிறத்தில் வண்ணமிடப்பட்டுள்ளது. ரயிலின் உள்பகுதியில், இரவிலும் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தரைப்பகுதி நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்தாலும் தெளிவாக தெரியும் வகையில் பெட்டிகளின் எண்கள், டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. புதுப்பொலிவுடன் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் விரைவு ரயில் புறப்பட்டது.
Discussion about this post