விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி நோவக் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதை பிரத்யேகமான பிரம்மாண்ட திரையில் பொதுமக்கள் கண்டு களித்தனர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் மற்றும் நோவக் ஜோக்கோவிச் ஆகியோர் விளையாடினர். இதுவரை நடந்த ஆட்டங்களில் மிக நீண்ட, ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டமான இந்த ஆட்டத்தை , ஏராளமானோர் திரண்டு கண்டு ரசித்தனர்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ரசிகர்களுக்காகவே விம்பிள்டன் நகரில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட திரையில் இந்த ஆட்டத்தை மக்கள் கண்டு களித்தனர்.
ரோஜர் கோப்பையை தவறவிட்டது வருத்தம்தான் என்றாலும், ஆட்டம் எந்த விதத்திலும், சுவாரஸ்யம் குறையாமல் நகர்ந்ததாகவும் மக்கள் தெரிவித்தனர்.
Discussion about this post