ஜப்பானில் சுமோ மல்யுத்த வீரர்களுடன், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான நோவக் ஜோக்கோவிச் பலப்பரீட்சை நடத்தியுள்ளார்.
ஜப்பான் ஒபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச் டோக்கியோ சென்றுள்ளார். அப்போது ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டான சுமோ மல்யுத்தத்திற்காக வீரர்கள் பயிற்சி செய்வதைக் கண்டு, ஆர்வ மிகுதியில் களத்தில் இறங்கி, மலை போன்று இருக்கும் ஒரு சுமோ வீரருடன் அவர், வேடிக்கையாக மோதியுள்ளார்.
இந்த வினோதப் போட்டி தொடர்பான புகைப்படங்களையும் ஜோக்கோவிச் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உடல் வலிமைக்காக நாளொன்றுக்கு 10 ஆயிரம் கலோரி அளவுக்கு உணவுகளைச் சாப்பிடுவதாக சுமோ வீரர்கள் தெரிவித்ததாக ஜோக்கோவிச் குறிப்பிட்டுள்ளார். தனக்கு சுமோ வீரருக்கு உரிய உடலமைப்பு இல்லை என்பதை உணர்வதாகவும், மேலும் சில கிலோக்கள் உடல் எடையை அதிகரித்தால் போட்டிக்குத் தயாராகி விட முடியும் என்றும் வேடிக்கையாகத் தெரிவித்துள்ளார்.
Discussion about this post